தாராபுரம், ஆக. 8 - தாராபுரம் உப்பாறு அணையிலிருந்து விவசாய உபயோகத்திற்காக மண் எடுக்க வழங்கப்பட்ட அனும தியை தவறாகப் பயன்படுத்தி வர்த்தக ரீதியாக விற் பனைக்குக் கொண்டு சென்ற 2 லாரிகளை கனிம வளத்துறை யினர் புதனன்று பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திலுள்ள உப்பாறு அணையிலிருந்து விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு கடந்த 4 நாட்களாக விவ சாயிகள் மண் எடுத்து வருகின்றனர். விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இச்சலுகையை வியாபார ரீதியாக ஒரு சிலர் பயன்படுத்துவதாக திருப்பூர் கனிம வளத்துறை உதவி இயக்குநருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர் சக்திவேல் தாராபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது ஒட்டன்சத்திரம் சாலையில் 2 லாரிகளில் வர்த்தக ரீதியாக விற்பனை செய்ய 2 லாரிகளில் மண் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. இதைய டுத்து வருவாய் ஆய்வாளர் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.