tamilnadu

img

கிராவல் மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

காங்கேயம், மார்ச் 18- காங்கேயம் அருகே கிராவல் மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல். காங்கேயம் தாலுகா பகுதியில் கிராவல் மண் மற்றும்  ஓடைக்கற்களை சிலர் சட்டவிரேதமாக கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து காங்கேயம் வட்டாட்சியர் புனித வதி தலைமையில் வருவாய் துறையினர் செவ்வாயன்று  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊதியூர் அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த இரு லாரி களை பறிமுதல் செய்தனர். இதைத்தெடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இந்த லாரிகள் என்.காஞ்சிபுரத்தை சேர்ந்த  சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.  இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2 லாரிகளும்  காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக் கப்பட்டன. மேலும், தாராபுரம் கோட்டாட்சியர் விசாரணை  நடத்தி அபராதம் விதிக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.