tamilnadu

img

திருப்பூரில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை வாலிபர் சங்கத்தினர் கற்களால் அடைத்து மூடினர்

திருப்பூர், அக். 28 – திருப்பூரில் பயன்பாடில்லா மல் இருக்கும் ஆழ்துளை கிணறு களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கற்களால் அடைத்து மூடினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றி யம், விஜயபுரி கார்டன் கிளை சார்பில் கூத்தம்பாளையம் பகுதி யில் பயன்பாடில்லாமல் இருந்த இரு ஆழ்துளை கிணறுகளை கற்களை அடைத்து மூடினர். இதில் ஒரு ஆழ்துளைக் குழாய் பல ஆண்டுகளுக்கு முன்பு துளை யிடப்பட்டது. இதில் தண்ணீர்  வராத நிலையில் அப்படியே விட்டு விட்டனர். இது சாலையோரத் திலேயே இருக்கிறது. அதேபோல் இந்த ஆழ்துளை கிணற்றுக்கு ஐந்தடி தொலைவில் மற்றொரு ஆழ்துளை கிணறு இருக்கிறது. இந்த ஆழ்துளை கிணற்றில் தண் ணீர் இல்லாத நிலையில் சுமார் மூன்றடி உயர பிளாஸ்டிக் பைப்  வைத்து திறந்த நிலையில் இருந் தது.  கூத்தம்பாளையம், குமரன் காலனி, ஒட்டப்பாளையம், அன் னையம்பாளையம் ஆகிய பகுதி களில் இருந்து பி.என்.ரோடு சென்று வரக்கூடிய பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் இருக் கும் பகுதியாகும். குறிப்பாக விஜய புரி கார்டன் பகுதியில் மாநக ராட்சி தொடக்கப் பள்ளி இருக்கி றது. இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இந்தச் சாலை வழி யாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குமரன் காலனி கிளைச் செயலா ளர் விக்னேஷ் தலைமையில், வாலிபர் சங்கத்தினர் திங்க ளன்று இந்த பயன்பாடில்லாத ஆழ்துளைக் குழாய் கிணறுகளை மூடும் பணியை மேற்கொண்ட னர். தரைமட்ட ஆழ்துளை கிணற் றில் பெரிய கருங்கல்லைக் கொண்டு அடைத்து மூடினர். அதேபோல் அருகில் இருக்கும் மற்றொரு ஆழ்துளை கிணற்றுக்கு சாக்கு போட்டு கயிற்றால்  கட்டி அடைத்தனர். விஜயபுரி கார்டனைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ், அஷ்ரப் அலி, அபுதாகிர், செந்தில், சேகர், சாதிக்பாட்சா, நூர் முகமது, குமார், நாச்சிமுத்து உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.  தற்போது தற்காலிகமாக இந்த  ஆழ்துளைக் கிணறுகள் அடைக் கப்பட்டுள்ளன. எனினும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் 3ஆவது வார்டு செட்டிபாளையம் பகுதி யில் இருக்கக்கூடிய பயனில்லாத, அனைத்து ஆழ்குழாய் கிணறு களை உடனே மூடுவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் என் றும் கேட்டுகொண்டுள்ளனர்.