tamilnadu

பதப்படுத்தும் உப்பை தடை செய்ய கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

திருப்பூர், ஜன. 23 -  பதப்படுத்தும் உப்பு விற்பனை செய் வதை தடை செய்து, கிராமசபைக் கூட்டங் களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்  என நுகர்வோர் அமைப்பினர் வலியு றுத்தினர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயனிடம், பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தினர் மனு அளித்து கூறியதாவது: ஜனவரி 26ஆம்  தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங் களில், மக்களின் பொதுநலம் கருதி, உணவு பாதுகாப்பு சட்டப்படி உணவுக்கான உப்பில் அயோடின் கலக்காமல் விற்பனை செய்யும், பதப்படுத்தும் உப்பை விற்பனை செய்ய தடை செய்து விழிப்புணர்வு தீர் மானம் நிறைவேற்ற வேண்டும். அயோடின் நுண்சத்து பற்றாக்குறை குறைபாடுகளை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல முயற்சி கள் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாது காப்புத்துறை மூலம் செய்து வருகிறது. பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்பு ணர்வு இயக்கம் கடந்த 5 ஆண்டுகளாக அயோடின்  கள  ஆய்வு  மற்றும்  விழிப்புணர்வு  பணியை அரசோடு இணைந்து செயலாற்றி  வருகிறது.   இந்நிலையில் இந்திய அளவில் உப்பு உற்பத்தியில் 2 ஆம் இடம் வகிக்கும் தமிழ் நாட்டின் தூத்துக்குடி, வேதாரண்யம் பகுதி  உப்பு உற்பத்தியாளர்கள் உணவு பாது காப்பு துறை சார்ந்த நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் பதப்படுத்தும் உப்பு என்ற பெயரில் ’உணவு பயன்பாட்டுக்கு அல்ல,’ என அச்சிட்டு கிராம மக்களை இலக்காகக் கொண்டு, உப்பு விற்பனையை செய்து வருகின்றனர். எனவே வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் கிராமத்தில் அயோடின் நுண்சத்து குறித்தும், பதப் படுத்தும் உப்பை விற்பனை செய்ய தடை விதிக்க கிராம சபையின் வலிமையுடன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.