tamilnadu

img

திருப்பூர்: குடியிருப்புப் பகுதியில் கேஸ் சிலிண்டர் கிடங்கு பாதுகாப்புக் கருதி காலி செய்ய மக்கள் கோரிக்கை

திருப்பூர், டிச. 28 – திருப்பூர் பத்மாவதிபுரம் குடியிருப்புப் பகுதியில் கேஸ் சிலிண்டர் கிடங்கு அமைக் கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி உடன டியாக அதை காலி செய்ய வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் வற்புறுத்துகின்றனர். பத்மாவதிபுரம் பகுதியில் உள்ள பாரதி காலனியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென ஒரு கேஸ் சிலிண்டர் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் கிடங்கு நிறுவனத்தின் பெயர், தொடர்பு எண், உரிமையாளர் உள்ளிட்ட எந்த விபரமும் தகவல் பலகையாக வைக் கப்படவில்லை. இங்கு அறிமுகமில்லாத நபர்கள் வாகனங்களில் வந்து சிலிண்டர் களை வைத்துச் செல்வதும், எடுத்துச் செல்வதுமாக உள்ளனர். அப்பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர் தங்கியுள்ளனர். எவ்வித வெளிப்படையான தன்மையும் இல்லாமல் மக்கள் நெருக்கம் மிக்க குடியிருப்புப் பகுதியில் இந்த கிடங்கு அமைக்கப்பட்டிருப்பது குடியி ருப்புவாசிகளுக்கு சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கேஸ் சிலிண்டர் கிடங் குகளை மக்கள் குடியிருப்பு இல்லாத பகுதிகளில், சுற்றிலும் 200 மீட்டர் காலி இடம் இருக்கக்கூடிய பகுதிகளில்தான் அமைக்க வேண்டும் என விதிமுறை இருப் பதாக சமையல் கேஸ் முகமை வைத்தி ருப்போர் தெரிவித்தனர். ஆனால் விதி முறைக்கு முரணாக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் இந்த கிடங்கு அமைக் கப்பட்டுள்ளது. இந்த கிடங்குக்கு எதிரில் ஒரு பனியன் கம்பெனியும், பின்புறம் ஒரு பனியன் கம்பெனியும் செயல்பட்டு வருகின்றன. இந்த கம்பெனிகளில் தலா நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அத்துடன் சுற்றிலும் வீடுகளும் அமைந்துள்ளன. இந்த கிடங்கைச் சுற்றிலும் 200 மீட்டர் காலி இடம் இல்லை, சுமார் 12 - 15 அடி அகலம், சுமார் 100 அடி நீளம் உள்ள மிகக்குறுகிய பகுதியில் திறந்தவெளியில் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதன் அருகிலுள்ள ஒரு பனியன் கம்பெனி யில் தீ விபத்து ஏற்பட்டு உடனடி யாக கவனிக்கப்பட்டு அது அணைக் கப்பட்டுள்ளது. இந்த கிடங்கிலோ, சுற்றிலும் இருக்கும் பகுதியிலோ இது போல் ஏதேனும் விபத்துகள் நேரிட்டால் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளதாக பொது மக்கள் கூறினர். எனவே மாவட்ட நிர்வாகமும், மாந கராட்சி நிர்வாகமும் இந்த கேஸ் கிடங்கு குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். விதிமு றைக்குப் புறம்பாக குடியிருப்புப் பகுதி யில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கிடங்கை மக்கள் பாதுகாப்புக் கருதி இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பத்மாவதிபுரம் கிளைச் செயலாளர் த.காளிதாஸ் கூறினார். இது குறித்து அரசு நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப் போவதாகவும், கேஸ் கிடங்கை அகற் றாவிட்டால் அடுத்தக் கட்டமாக மக்க ளைத் திரட்டி போராட்டம் நடத்துவது பற்றி கலந்தாலோசனை நடத்தி தீர் மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.