tamilnadu

திருப்பூர்: இன்று நடைபெறும் விடுபட்ட 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

திருப்பூர், ஜூலை 26- 12 ஆம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வு களை எழுத முடியாதவர்கள் திங்களன்று அத் தேர்வுகளை எழுதுவதற்கான பள்ளிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடந்த பிளஸ் 2 வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடி யாதவர்களுக்கு, திங்களன்று கீழ்கா ணும் 12 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதன்படி மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பல்லடம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பொங்கலூர், பி.வெ.கே.என். மேல்நிலைப்பள்ளி, ஊத் துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அய்யங்காளிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் பழனியம் மாள் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, திருப்பூர் டி.என்.எஸ்.எஸ். காந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர். மேல்நிலைப்பள்ளி, உடுமலை ஆர்.கே.ஆர். மேல்நிலைப்பள்ளி, உடுமலை ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி களில் தேர்வு நடைபெறுகிறது.  

வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களில் மொத்தம் 41 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். இத்தேர்வுகளைப் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளி யிலேயே தேர்வெழுத வழிவகை செய்யப் பட்டுள்ளது. தனித்தேர்வர்களை பொறுத்த மட்டில் அவர்கள் ஏற்கனவே பிற தேர்வர் களை எழுதிய தனித்தேர்வு மையங்களி லேயே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதேபோல் கொரோனோ நோய் தொற் றைத் தடுக்கும் வகையில், கிருமிநாசினி தெளிப்பு மற்றும் கைகளை சுத்தம் செய்யும் தேவையான பொருட்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. மேலும் தேர்வுப் பணியில் ஈடுப டும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கு முகக் கவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.