tamilnadu

திருப்பூர்: 12 பேருக்கு நல்லாசிரியர் விருது

திருப்பூர், செப். 7– திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 12 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் திங்களன்று வழங் கினார். சிறப்பான முறையில் பணியாற்றிய ஆசிரியர்க ளுக்கு வழங்கப்படும் டாக் டர் சி.ராதாகிருஷ்ணன் நல் லாசிரியர் விருது பெற திருப் பூர் மாவட்டத்தில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆசிரியர்கள் தேர்வு செய் யப்பட்டனர். இந்த விரு தினை தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு திங்க ளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் வழங்கினார். இந் நிகழ்வில், சட்டமன்ற உறுப் பினர்கள், அரசுத்துறை அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.