tamilnadu

img

ஊரடங்கு முடியும் நிலையிலும் நிவாரணம் இல்லை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு முறையீடு

திருப்பூர், ஜூன் 1 – கொரோனா ஊரடங்கு காலத்தில் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ள கட்டுமா னம் உள்ளிட்ட முறை சாராத் தொழிலார் களுக்கு ஊரடங்கு முடியும் நிலையிலும் உரிய நிவாரணம் தரப்படாததால் உடனடி யாக வழங்குமாறு சிஐடியு தொழிற்சங்கங் கள் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது. சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார், தையல் கலைஞர்கள் சங்க மாவட்டச் செய லாளர் சி.மூர்த்தி, சாலையோர வியாபாரி கள் சங்கச் செயலாளர் பி.பாலன், பொதுத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணி, மோட்டார் சங்க மாவட் டச் செயலாளர் ஒய்.அன்பு, சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சதா சிவம் மற்றும் ராஜன், வி.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இம்மனுவில், கடந்த மார்ச் 24ஆம் தேதி  கொரோனா ஊரடங்கு பிறப்பித்து 60 நாட்க ளுக்கு மேலாகிவிட்ட நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலையின்றி, வரு மானம் இல்லாமல் பசியோடு போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவார ணம், கட்டுமானம் மற்றும் ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய பொருட் கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காலம் முடிவுக்கு வந்தும் இதுவரை பெரும்பகுதி தொழிலாளர்க ளுக்கு நிவாரணப் பணம் தரப்படவில்லை.

அதேபோல் ஒரு பகுதியினருக்கு நிவார ணப் பொருள் கிடைத்தும் பணம் கிடைக்க வில்லை. மறு பதிவு செய்துள்ள தொழிலா ளர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்க வில்லை. கடும் நெருக்கடி சூழ்நிலையில் நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் செய்வது நியாயமில்லை. பசிக்கு வழங்காத பொருளும், பணமும் பயனற்றுப் போகும். எனவே குடும்ப சிரமத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக நிவாரணம் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். நிவாரணம் தராத நிலை நீடித்தால் வரும் 10ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியரகத் தில் மனுக் கொடுக்கும் போராட்டம் தொழி லாளர்களைத் திரட்டி நடத்தப்படும் என்றும் சிஐடியு நிர்வாகிகள் தெரிவித்தனர்.