திருப்பூர், ஜூன் 1- திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப் புப் பொதுத்தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் திங்களன்று நடைபெற்றது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜுன் 15 ஆம் தேதியன்று முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1 வகுப் பிற்கு விடுபட்ட ஒரு தேர்வானது ஜுன் 16 ஆம் தேதியும், பிளஸ் 2 கடைசித் தேர் விற்கு வருகை புரியாத மாணாக்கர்க ளுக்கு ஜுன் 18 ஆம் தேதியும் நடைபெற வுள்ளது. இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த் திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வினை திருப்பூர் வருவாய் மாவட்டத் தில் 215 மேல்நிலைப் பள்ளிகளில் பயி லும் 11 ஆயிரத்து 767 மாணவர்களும், 14 ஆயிரத்து 144 மாணவிகளும், தனித்தேர் வர்களாக 181 மாணவ, மாணவிகளும் ஆக மொத்தம் 26 ஆயிரத்து 092 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுத உள்ளனர்.
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர் வினை 349 பள்ளிகளில் பயிலும் 14 ஆயி ரத்து 835 மாணவர்களும், 14 ஆயிரத்து 911 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 856 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 602 மாணவ, மாணவியர்கள் தேர் வெழுத உள்ளனர். மேல்நிலை, இடைநிலை பொதுத் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன் மைக் கண்காணிப்பாளர்களாக 349 தலை மையாசிரியர்களும், துறை அலுலவர், கூடு தல் துறை அலுவலர்களாக 349 ஆசிரியர்க ளும், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 2 ஆயிரத்து 985 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர். மேல்நிலை பொதுத் தேர்விற்காக முதன் மைக்கல்வி அலுவலர் மூலமாக 150 ஆசிரி யர்களைக் கொண்ட பறக்கும்படை அமைக் கப்படவுள்ளது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விற்கு மாவட்டக்கல்வி அலுவலர்கள் மூலமாக 200 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது.
இணை இயக்குநர் தலைமையிலும் பறக் கும்படை அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு தேர்வுமையத்திலும் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டியும் வைக்கப் படும். மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள் ளியிலேயே தேர்வை எழுதிக் கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பறையிலும் 10 மாணவர் கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்ப டுவர். அனைத்து தேர்வு மையங்களும் காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வு மையவளாகம் முழுமையும் மற்றும் தேர்வறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படும். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் முகக்கவசங்கள் வழங் கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதற்கு முன்பே கைகளை சுத் தம் செய்வதற்கு கிருமிநாசினிகள் வழங் கப்படும்.
மாணவர்கள் சமூக இடைவெ ளியை பின்பற்றி அமரவேண்டும். அனைத்து தேர்வு மையங்களிலும் பாது காப்பு வழிமுறைகளை முழுமையாக வும், சீரிய முறை யிலும் ஏற்படுத்தப்ப ட்டுள்ள்ளமை யால் மாணவர்கள் எவ்வித பயமுமின்றியும்,பதட்டமுமின்றியும் தேர்வினை எழுத லாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.