அவிநாசி, ஜூன் 17 - அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 4.53 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மேம்படுத்தும் பணிகளை சபாநாயகர் தனபால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட ரங்கா நகர் வழியாக சாலையூர் செல்லும் 2.10 கி.மீ சாலை, அவிநாசி-மங்கலம் சாலை முதல் முருகம்பாளையம் வழியாக கணியாம் பூண்டி சாலையை 1.75 கி.மீ பலப்படுத்துதல், ராக் கியாபாளையம் சாலை முதல் குளிக்காடு வழியாக வேலம்பாளையம் செல்லும் 2.40 கி.மீ. சாலை, கரு வலூர் ஆலாம்பாளையம் சாலை முதல் அத்திக் காட் டுப்பாளையம் வரை செல்லும் 3.25 கி.மீ. சாலை, நடுவச்சேரி கூட்டப்பள்ளி சாலை முதல் முதலிபா ளையம் வரை 1.90 கி.மீ சாலை, குட்டகம் சாலை முதல் கொட்டக்காட்டுப்பாளையம் செல்லும் 1.10 கி.மீ. சாலை என 13.50 கி.மீ சாலைகளை ரூ. 4 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் படவுள்ள பணிக்காக அவிநாசி ரங்கா நகரில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்ததில் தமிழக சட்டப்பேரவை தலைவரும், அவிநாசி சட்டமன்றத் தொகுதி உறுப் பினருமான தனபால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் மு.சுப்ரமணி யம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அ.ஜெக தீசன், வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் ஜி.வேலுச் சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.