உடுமலை, டிச. 25- எஸ்என்எம்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் (Open Space Foundation) இணைந்து நடத்தும் முழு வளைய சூரிய கிர கண பயற்சி பட்டறை உடுமலை அமேசான் பப்ளிக் பள்ளி மற்றும் சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. எஸ்என்எம்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் க.லெனின்பாரதி தலைமை வகித்தார். சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கி.கோப்பெருந்தேவி வர வேற்றார். அமேசான் பள்ளி முதல்வர் சீமா சையது முன் னிலை வகித்தார். “சூரிய கிரகணம் -வான்வெளி அதிசயம்” எனும் தலைப்பில் ஜி.கிருத்திகா கிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் 350 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சூரிய வடிகட்டி கண்ணாடி (solar filter) மூலம் சூரிய கிரகண நிகழ்வை கண்டுகளிக்க பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை பேராசிரியர் வெங்கடேஷ், இயற்பியல்துறை ஆர்.ரமேஷ்கிருஷ்ணன், பி.சந்தியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.