தஞ்சாவூர், ஜன.9- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூ ரியில் “இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் டிப்ளமோ மாணவர்க ளுக்கான உயர் கல்வி வாய்ப்பு” பற்றிய பயிற்சிப் பட்டறை புதன்கி ழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வீ.முத்துவேலு தலைமை வகித்தார். கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஒருங்கிணை ப்பாளர் டி.வின்சென்ட் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான கோவை ஸ்ரீரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரி துறைத்தலைவர் முனைவர் தமிழ்ச்செல்வி பயிற்சிப் பட்டறை நடத்தினார். கல்லூரி துணை முதல்வர் ஏ.அமலோற்பவ செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சி யின் மூலம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பயிலும் 360 மாணவ, மாணவியர்கள் பயனடைந்தனர்.