சென்னை, ஜூன் 12- இளம் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சென்னை யில் ஜூன் 11, 12 தேதிகளில் இரண்டு நாட்கள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 200 இளம் நரம்பி யல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டனர். இந்திய நரம்பியல் கழகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுகளை நிறுவுவதில் எதிர்கொள்ளும் சவால்கள், அறுவை சிகிச்சை கூடங்களை நிர்வகித்தல், ஆராய்ச்சி மற்றும் புதிய மருத்துவபுத்தங்கள் வெளியிடு வதை ஊக்குவித்தல். மேற்கத்திய நாடுகளுக்கு நிகரான பயிற்சி உள்ளிட்ட விஷயங்கள் இந்த பட்டறையில் விவாதிக்கப்பட்டது. இதில் இளம் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்க ளுக்கு மூத்த நிபுணர்கள் வழிகாட்டுதல்களையும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் தெரிவித்தனர் என்று பயிற்சி பட்டறையின் தலைவர் டாக்டர். ரூபேஷ் குமார் கூறினார்.