திருப்பூர், ஆக. 7 – தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் வட்டக் கிளை மூன்றாவது மாநாடு திங்களன்று திருப்பூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெற்றது. வட்டக் கிளைத் தலைவர் க.சண்முகம் தலைமை ஏற்க, என்.குருராஜன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் செ.நடராஜன் மாநாட்டைத் தொடக்கி வைத்தார். செயலாளர் மகுடேஸ்வரன், பொருளாளர் எஸ்.சுந்தர்ராஜன் ஆகியோர் அறிக் கையை முன்வைத்தனர். மாவட்டச் செயலாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி வாழ்த்திப் பேசினார். இதில் சங்கத்தின் கிளைத் தலைவராக பி.மகு டேஸ்வரன், துணை தலைவர்களாக ஜி.நாகராஜன், என்.குருராஜன், செயலாளராக ரோஸ்மேரி, இணைச் செயலாளர்களாக எஸ்.ஆறுமுகம், கி.கலியபெரு மாள், பொருளாளர் எஸ்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பி.பாலகிருஷ்ணன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றி னார். இணைச் செயலாளர் கி.கலியபெருமாள் நன்றி கூறினார்.