tamilnadu

img

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை, செப்.22- கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  கோவை மாவட்டத்தில் பணியாற்றுகிற நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் குரலாய் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் செயல்பட்டு வருகிறது. பல  முன்னணி ஊடகத்தில் பணியற்றும் ஊடகவியாலாளர் களை உறுப்பினராக கொண்டுள்ள இம்மன்றத்தில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆடிஸ்வீதியில் உள்ள பத் திரிகையாளர் மன்றத்தில் தலைவர் அ.ர.பாபு தலைமை யில் ஞாயிறன்று நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர் சரவணன், பொருளாளர் ரத்தன்குமார் ஆகியோர் அறிக் கையை முன் வகித்து பேசினர். இதனையடுத்து, ஊடகவி யலாளர்களுக்காக தமிழக அரசின் சார்பில் சலுகை விலை யில் வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது. இதன்ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி ஊடக வியலாளர்களுக்கு முதற்கட்டமாக சந்தை மதிப்பிலான வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கியுள்ளது.  தற் போது வழங்கப்பட்டுள்ள வெள்ளானப்பட்டி இடத்தில் மீதி உள்ள நிலத்தில் இரண்டாவது கட்டமாக தகுதியுள்ள ஊடகவியலாளர்களை பட்டியல் எடுத்து வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக, பொதுக்குழுவில் புதிய தலைவராக அ.ர.பாபு (தீக்கதிர்), செயலாளராக க.தங்கராசு (தினமணி),  பொருளாளராக தி.விஜய் (விகடன்குழுமம்) உள்ளிட்ட 13 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை மூத்த வழக்கறிஞரும், மன்றத்தின் தேர்தல் அதி காரியுமான சி.ஞானபாரதி மன்றத்தின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். முடிவில் மன்ற பொருளாளர் விஜய் நன்றி கூறினார். இதில் ஏராளமான ஊடகவியலாளர்கள் பங் கேற்றனர்.