தாராபுரம், நவ. 3 - தாராபுரத்தில் வைரஸ் காய்ச்ச லுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவுகி றதா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தாராபுரம் அடுத்த தளவாய் பட்டிணம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் வேல்முருகன் (14) உடுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளி யில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்க ளுக்கு முன்பு வேல்முருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தள வாய்பட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேல்முருகனை சிகிச்சைக்காக பொன்னுசாமி அழைத்து சென்றார். பணியி லிருந்த செவிலியர் மாத்திரை களை வழங்கி அனுப்பி வைத்துள் ளார். ஆனால் காய்ச்சல் கட்டுப் படாததால் மறுநாள் மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பணியில் இருந்த மருத்து வரிடம் காண்பித்து சிகிச்சை பெற்று மீண்டும் வீட்டிற்கு வேல் முருகனை அழைத்து வந்தார். ஆனால் காய்ச்சல் குறையா மல் தீவிரமடைந்ததையடுத்து சனிக்கிழமை மாலை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர் கள் வேல்முருகன் இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். வைரஸ் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. தாராபுரம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச் சலால் பாதிக்கப்பட்டு வருபவர் களை தீவிரமாக கண்காணித்து சிகிச்சையளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். மேலும் தாராபுரம் பகுதியில் காய்ச்சலால் தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வருபவர்க ளின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. இதனால் மர்மகாய்ச்சல் பர வுகிறதோ என பொதுமக்கள் மத் தியில் அச்சம் எழுந்துள்ளது.