அவிநாசி, ஆக. 30 - அவிநாசி பகுதியில் ரூ.1 கோடி கடன் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் வரை மோசடி செய்தவரை காவல்துறையினர் சனியன்று கைது செய்தனர். சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆல்வின்ராய் என்பவரின் மனைவி ஜெனிபர் (32). இவர் நாளிதழில் வந்த விளம்பரத்தைப் பார்த்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ஆச்சார்யா என்பவர் ரூ.1 கோடி கடன் தருவதாகக்கூறி அதற்கான முன் பதிவுத் தொகையாக ரூ. 4 லட்சம் கேட்டுள்ளார். இதைய டுத்து கடந்த வியாழனன்று ஜெனிபர் ரூ.4 லட்சம் கொடுத் துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ஆச்சார்யா, ரூ.55 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அதில் ரூ.11 ஆயிரம் மட்டுமே ரூபாய் நோட்டுகளாகவும், மீதமுள்ள நோட்டுகள் அனைத்தும் போலி ரூபாய் நோட்டுகளாகவும் இருந்துள் ளன.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெனிபர் அவி நாசி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இப்புகா ரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப் படை அமைத்து ஆச்சார்யா என்பவரைத் தேடி வந்தனர். இதற்கிடையில், கோவை மணியகாரம்பாளையத்தில் தலை மறைவாக இருந்த பெரியசாமி மகன் சுரேஷ்குமார் (எ) ஹரீஸ் ஆச்சார்யாவை (43) தனிப்படை போலீசார் சனியன்று கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயி ரம் ரொக்கப்பணம் மற்றும் கார் உள்ளிட்டவைகள் பறி முதல் செய்யப்பட்டன.