states

img

குஜராத்தில் போலி சுங்கச்சாவடிகள் அமைத்து மோசடி!

குஜராத் மாநிலத்தில் ஒன்றிய அரசுக்கு போட்டியாக ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்று போலி சுங்கச்சாவடி அமைத்து, சுமார் ரூ.75 கோடி மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் பாமன்போர் - கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் ஒன்று தங்களுக்குச் சொந்தமான இடத்தில் சுங்கச்சாவடி அமைத்து, நெடுஞ்சாலையில் பாதைகளை மாற்றி தாங்கள் அமைத்த சுங்கச்சாவடி வரை சாலை அமைத்துள்ளனர். மேலும் குறைந்த கட்டணத்தை வசூலித்து வந்துள்ளனர். இதனால் பலரும் இந்த சுங்கச்சாவடியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படி ஒரு சுங்கச்சாவடி செயல்படுவது குறித்து போலீசார் உட்பட எந்த அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. இந்நிலையில்தான் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் திருப்பி மாற்று வாதையில் விடப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்துள்ளது. இந்த புகாரை அடுத்து ஆய்வு செய்தபோதுதான் ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்று போலி சுங்கச்சாவடி அமைத்து, சுமார் ரூ.75 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் பாதையை மாற்றி, இந்த வசூல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.