tamilnadu

தோட்டத்துப்பாளையத்தில் தார்ச்சாலை அமைத்துத்தரக் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 3- திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் அருகே தோட் டத்துப்பாளையம் பகுதிக்கு தார்சாலை, சாக்கடை உள் ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட தோட்டத்துப்பாளையம் பகுதியில் ரேசன் கடை திறக்கப்படவுள்ளது. இந்த ரேசன் கடையை திறப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் வருவதால் பேருந்து நிறுத்தத்திலிருந்து ரேசன் கடை வரை மட்டும் ஏற்கனவே குண்டும், குழியுமாக இருந்த சாலை செப்பனிடப்பட்டது.

ஆனால், மக்கள் பயன்படுத்தும் வகையில் தோட்டத்துப்பாளையம் முழுவதும் சாலை கள் செப்பனிடப்படாமல் உள்ளது. எனவே மாநகராட்சி நிர் வாகம் பகுதி முழுவதும் உள்ள அனைத்து வீதிகளையும் உட னடியாக செப்பனிட்டு தர வேண்டும். அதேபோல் தோட் டத்துப்பாளையத்திலிருந்து நெருப்பெரிச்சல் வரையிலான பிரதான சாலையில் உள்ள மரணக்குழிகளையும் சரி செய்திட வேண்டும். மேலும் இப்பகுதியில் சாக்கடை வசதி இல்லாமையால் தெருக்களில் கழிவுநீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இவ்வாறு தேங்கும் கழிவு நீரினால் கொசுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் நோய் பரவும் அபாயம் தொடர்ந்து இருந்து வருகிறது.

 எனவே சாலைவசதி, சாக்கடைவசதி, தெரு விளக்கு இல் லாத இடங்களில் புதிய தெருவிளக்கும், ஏற்கனவே பழு தடைந்த தெரு விளக்குகளை சரிசெய்து உதவிடுமாறும், ஊர் பொதுமக்களின் சார்பில் கேட்டுக்கொள்வதாக தோட் டத்துப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் ரா.கணேசன் கேட்டு கொண்டுள்ளார்.