திருப்பூர், ஜூலை 23- பால் கொள்முதல் குறைப்பதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, சேடர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் விவசாயிகள் கறவை மாடு உற்பத்தி செய்யும் பாலினை ஆவின் நிர் வாகத்திற்கு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென்று ஆவின் நிர்வாகம் விவசாயிகளிடமிருந்து பெறம் பாலினை 20 சதவிகிதமாக குறைப்பதாக அறிவித் துள்ளது.
இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கவலை யையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஊத்துக்குளி, சேடர்பாளையத்திலுள்ள ஆவின் நிர்வாகம் புதனன்று விவசாயிகளிடம் பெற்ற பாலை திருப்பி அனுப்பியுள்ளது. இதைக்கண்டித்தும், 20 சதவிகிதம் பால் குறைப்பதன் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கொள்முதல் செய்யும் பாலுக்கு ஆவின் நிர்வாகம் சங்கங்களுடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.
ஆவின் மூலமாக மானிய விலை கலப்பு தீவனம் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி வியா ழனன்று சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். குமார், கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பழனிச்சாமி, தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகி குழந்தைசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.