tamilnadu

img

வருவாய்த் துறை ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குக ஊழியர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

திருப்பூர், ஆக. 5 - கொரோனா பணியின்போது நோய்த்தாக்குதலில் உயிரிழந்த வருவாய்த் துறை ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் புதன்,  வியாழன் ஆகிய இரு நாட்கள்  தற்செயல் விடுப்புப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பணியில் உயி ரிழந்த வருவாய்த்துறை அலுவலர் களுக்கு ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த ரூ.50 லட்சம் நிவார ணத்தை உடனே வழங்க வேண்டும். நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள வருவாய் அலுவலர்களுக்கு உயர்  தரமான சிகிச்சை, கருணைத் தொகை ரூ.2 லட்சம் உடனடி யாக வழங்க வேண்டும்.

இந்நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து வருவாய்ப்பணியாளர் களுக்கும் உரிய பாதுகாப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரு வாய்த்துறையினர் இருநாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

திருப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ச.முருக தாஸ் உட்பட மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட் சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர்  அலுவலகங்கள் மற்றும் இதர சிறப்பு அலுவலகங்களில் பணிபுரியும் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை 270-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.  

தருமபுரி இதேபோல், தருமபுரி வட்டாட் சியர் அலுவலகம் முன்பு  நடை பெற்ற தற்செயல் விடுப்பு போராட் டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

இதில், சங்கத் தின் மாநிலசெயலாளர் சு.வெங் கடேசன், மாவட்டத்தலைவர் சரவணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளி நாதன், மாவட்டசெயலாளர் ஏ.சே கர், மாவட்ட பொருளாளர் கே.புக ழேந்தி, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்சங்க மாநிலதுணைத் தலைவர் ஆறுமுகம், சத்துணவு  ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் உள் ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.