திருப்பூர், மே 21 - திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் வருவாய் கிராமம், 18 ஆவது வார்டுக்கு உட்பட்ட பாரதி நகரைச் சேர்ந்தவர் விஜய குமார். இவர் தன்னுடைய தந்தை இறப் பிற்கு பிறகு வாரிசு சான்றிதழ் கோரி ஆன் லைனில் விண்ணப்பித்தார். பல மாதங்கள் கடந்தும் ஆன்லைனில் விண்ணப்பித்த மனுவினை நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அதிகாரி ஏசய்யன் ஆய்வு மேற்கொள் ளாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலை யில், ஊரடங்கு அறிவித்த சூழலில் மனு தாரர் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க முடியவில்லை. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலை யில் கடந்த திங்களன்று விஜயகுமாரும், அவ ரது தாயாரும் கிராம நிர்வாக அலுவல கத்திற்குச் சென்று வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்துள்ளதைக் கூறி ஆதா ரங்களையும் சமர்ப்பித்துவிட்டு காத்தி ருந்தனர்.
இதற்கு பதிலளித்த கிராம நிர்வாக அதிகாரி ஏசய்யன், உங்கள் மனுவினை மேலதிகாரிக்குப் பரிந்துரை செய்ய வேண் டுமானால் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண் டும் என்று லஞ்சம் கேட்டிருக்கிறார். இதைக் கேட்டு விஜயகுமாரும், அவரது தாயாரும் ஊரடங்கு காலத்தில் தங்களிடத்தில் வரு மானம் இல்லை, கையில் காசும் இல்லை. இந்த சூழ்நிலையில் லஞ்சம் கேட்கிறீர் களே? என்று கேட்டுள்ளனர். ஆனால் காசு கொடுத்தால்தான் வேலை நடக்கும் எனக் கூறி ஏசய்யன் அவர்களை வெளியில் காத் திருக்கச் சொல்லிச் சென்று விட்டார் என கூறப்படுகிறது. இதன்பிறகு அவர்கள் மனுவினை ஏந் தியபடி கிராம நிர்வாக அலுவலகத்தின் வாயிலில் காத்திருந்து போராட்டத்தில் ஈடு படத் தயாரானார்கள்.
இத்தகவல் அறிந்து அலுவலகப் பணியாளர்களை அனுப்பி வெளியில் நிற்பவர்களை உள்ளே வரச் சொல்லி மேலதிகாரிக்குப் பரிந்துரை செய்துவிட்டேன், அங்கே அவ ரும் பணம் கேட்பார், அவர் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு வந்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். தமிழக அரசு வருவாய்த்துறை சார் பில் சான்றிதழ் கோருபவர்கள் ஆன்லை னில் விண்ணப்பித்தால், ஆவணங்கள் சரி யாக இருந்தால் உடனே சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இடை யில் லஞ்சம் பிரச்சனை தவிர்க்கப்படும் என வும் கூறுகிறது. ஆனால், வருவாய்த்துறை யில் சில அலுவலர்கள் இதுபோன்ற ஆன் லைன் விண்ணப்ப மனுவினை பரிசீல னைக்கு எடுத்துக் கொள்ளாமல் லஞ்சம் வாங்குவதற்காகவே காலம் தாழ்த்துகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர், நில வரு வாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக பணம் கொடுத்துத்தான் வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டிய நிலை உள் ளது, பணம் இல்லாததால் என்ன செய் வதென்று தெரியவில்லை என்று விஜய குமார் வேதனையுடன் கூறினார். இந்நிலையில், அவருக்கு உரிய முறை யில் வாரிசு சான்றிதழ் கிடைக்க வருவாய்த் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற மனு தாரர்களிடம் லஞ்சம் கேட்டு மன வேத னைக்கு உள்ளாக்கிய கிராம நிர்வாக அதி காரி ஏசய்யன் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.