tamilnadu

img

குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அவிநாசி, ஜூன் 7- அவிநாசியை அடுத்த உப்பிலி பாளையம் ஊராட்சியில் குடி நீர் விநியோகத்தை முறைப்படுத் தக்கோரி அப்பகுதி மக்கள் வெள்ளியன்று ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அவிநாசி ஒன்றியம், உப்பிலி பாளையம் ஊராட்சியில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள  உப்பிலிபாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், மோர்பாளை யம் ஆகிய பகுதிகளில் கடந்த பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் இன்ன லுக்குள்ளாகி வந்த நிலையில் வெள்ளியன்று ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கூறுகையில், உப்பிலி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டு  ஏழு கிராமங்கள் உள்ளன. இப்பகு திக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் கூட விநியோகிகப்படுவதில்லை. குடிநீர் முறையாக வழங்கி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. ஆழ்துளை குழாய் குடிநீர் கூட ஒரு வாரமாக விநியோகிக்கப் படவில்லை.  மேலும், முருகம்பாளையத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் உள்ளது. அதன் மூலம் உப்பிலிபாளையம் பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்து வந்த நிலையில் மின் மோட்டரை வேறு பகுதிக்கு மாற்றி விட்டனர். பழுதடைந்த மோட்டார்களை சரி செய்யாமல் கிடப்பில் போட்டு உள்ளார். அதுமட்டுமின்றி ஊராட்சி செயலாளர் அலுவலகம் வருவதில்லை. கைபேசியில் அழைத்தால் எடுப்பதில்லை.  இதேபோல், ஊராட்சி மன்ற அலுவலகம் மாசடைந்துள்ளது.சாக்கடை சுத்தம் செய்யவில்லை. கொசு மருந்து அடிக்கவில்லை ஆகிய கோரிக்கைகளை எல்லாம் முன்வைத்து இத்தோடு மூன்றா வது முறையாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என ஆவேசமாக தெரிவித்தனர்.    இப்போராட்டத்தைத் தொடர்ந்து ஊராட்சிஒன்றிய அதிகாரி தவமணி, பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி னார். இதில் மாலைக்குள் பொது மக்களுக்கு முறையாக உப்பு தண்ணீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.