tamilnadu

img

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல்: திமுக வெற்றி....

தேனி:
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றி யுள்ளது. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தேர்தலில்16 வார்டுகளில் திமுக.-8, அதிமுக.-6, தேமுதிக., அமமுக. தலா ஒன்று எண்ணிக்கையில் வெற்றிபெற்றனர். திமுக. பெரும்பான்மை வெற்றி பெற்றுஒன்றியத் தலைவர் பதவிக்கு ஏழாவது வார்டு தங்கவேல், எட்டாவது வார்டு செல்வம் போட்டியிட்டனர். உடன்பாடு ஏற்படாததால் செல்வம் அதிமுகவிற்கு தாவினார். இந்த நிலையில் தேமுதிக உறுப்பினர்அதிமுக.விற்கும், அமமுக.

உறுப்பினர் திமுகவிற்கும்ஆதரவளித்தனர். இரு கட்சிகளும் சம பலத்தில் இருந்தன.தலைவர் தேர்தலின் போது ஒரு தரப்பு புறக்கணிப்பால் தேர்வு நடத்த முடியாமல்ஒரு ஆண்டாக நீடித்தது. ஒன்றியத் தலைவர்  தேர்தல் நடத்த கோரி தி.மு.க.உறுப்பினர் தங்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்  கிளையில் வழக்குதொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிப். 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த  உத்தரவிட்டது. ஒன்றியத் தலைவர் தேர்தலுக்கு மூன்று முறை நாள் குறித்தும் நடத்த முடியாத நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி திங்களன்று நடத்தப்பட்டது.   தேர்தலை சார் ஆட்சியர் சினேகா நடத்தினார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவைச் சேர்ந்த தங்கவேலுவெற்றி பெற்றுள்ளார். 

மொத்தமுள்ள 16 வாக்கு களில் ஒன்பது வாக்குகள் பெற்று தங்கவேலு வெற்றி பெற்றுள்ளார். மறைமுகத் தேர்தலில் அமமுக, தேமுதிக உறுப்பினர்களின் ஆதரவுடன்  தங்கவேலு தலைவரானார்.  வாக்களித்த தேமுதிக பிரமுகர் கண்ணனை உடனடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியி லிருந்து  நீக்கியுள்ளார்.