திருப்பூர், ஜூலை 16– கொரோனோ ஊரடங்கு காலத்தில் தனிமனித விலக லோடு திருமணம் நடத்தி வைக்கும் புதிய முயற்சியாக, மண மக்கள் இருக்கும் இடம் தேடிவரும் நடமாடும் திருமண மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களி டையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு அடிப்படையான வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல.
இதில் ஊராரை அழைத்து பிரம்மாண்டமாக நடத்திய திருமணங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட் டுள்ளது. கொரோனோ ஊரடங்கு காலத்தில் தனிமனித விலகலோடு திருமணம் நடத்தி வைக்கும் நடமாடும் திரு மண மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. சானிடைசர், வெப்பமானி, மணவறை உள்ளிட்ட வசதிகளுடன் மணமக்கள் இடத்திற்கே நடமாடும் திரு மண மண்டபத்தைக் கொண்டு வருகின்றனர். உடுமலை அலங்கார கலைஞர் ஹக்கீமின் புது முயற்சியாக உரு வாக்கப்பட்டுள்ள இந்த திருமண மண்டபத்துக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. திருமண மண்டபங்கள், கோவில்கள் மூடபட்டுள்ள நிலையில் தோர ணங்கள், இருக்கைகள்கூட இல்லாமல் இல்லங்களில் திரு மணங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அலங் கார அமைப்பாளர் ஹக்கிம் தனது கனரக வாகனத்தில் மண மக்கள் வீட்டுக்கு அருகே மண்டபம் போல் செட் அமைத்துக் கொடுக்கிறார். இங்கு வருபவர்களுக்கு வரவேற்பு அறை யிலேயே உடல்வெப்பம் அளக்கும் பரிசோதனை கருவி யும், சானிடைசர், முகக்கவசம் போன்றவை அளித்தும் ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நடத்தபட்ட சுபகாரியம் போல் நடத்திட ஒரு சிலருக்கு ஏற்பாடு செய்து கொடுத் துள்ளார்.