tamilnadu

img

கொரோனா பாதிப்பால் நேந்திரன் வாழை விலை வீழ்ச்சி

அவிநாசி, மார்ச் 16 - கொரோனா பாதிப்பு ஏற்பட் டுள்ளதால் அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் நேந்திரன் வாழை விலை  வீழ்ச்சியடைந்துள்ளது. அவிநாசி பகுதிகளில் பூவன், ரஸ்தாளி, நேந்திரன் வாழைகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நேந்திரன் வாழை சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 700 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேந்திரன் வாழைதார்களை இப் பகுதி விவசாயிகள் கேரளாவிற்கு அனுப்புகின்றனர். இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் கேரளாவில் பரவியுள்ளதால் பள்ளிகளுக்கு விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிப்ஸ் தயாரிப்பாளர்களும் கடைகளை அடைத்துள்ளனர். இதனால் நேந்தி ரன் விலை கடும் சரிவை ஏற்படுத்தி யுள்ளது.  இது குறித்து விவசாயிகள் கூறு கையில், கடந்த ஆண்டு கிலோ ரூ.40 முதல் 48 வரை விற்றது. சில  மாதங்க ளுக்கு முன்பு ரூ.38 க்கு விற்ற நேந்தி ரன் வாழைக்காய் தற்போது ஒரு கிலோ ரூ.8 முதல்12 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. இதனால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.