tamilnadu

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்கை மாற்றம் தேவை! கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தல்

திருப்பூர், அக். 15 - திருப்பூர் மாநகராட்சியில் நிறை வேற்றப்படும் ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தில் கொள்கை மாற்றம் தேவை என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசிடம் வலி யுறுத்தி இருப்பதாக திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறினார். திருப்பூரில் செவ்வாயன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட் டம் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்ட முடிவில் கே.சுப்பராயன் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அத்திட்டத்தில் சாலை விரிவாக் கம், குப்பை அகற்றம், பாதாளச் சாக்கடை போன்றவற்றை நிறை வேற்ற உரிய விதிமுறைகள் இல்லை. சாலை வசதியை மேம்ப டுத்தாமல், குப்பைகளை அகற்றி சுத் தமாக வைத்துக் கொள்ளாமல், பாதாளச் சாக்கடை வசதியை ஏற் படுத்தித் தராமல் எப்படி ஸ்மார்ட் சிட்டியாக இருக்கும். எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு கொள்கை மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசி டம் வலியுறுத்தி உள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் டவுன்ஹால் கட்டிடத்தை இடித்தது தவறு. மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தை இடித்து கார் பார்க்கிங் கட்டப் போகின்றனர். கார் பார்க்கிங் இருந்தால் அதை பள்ளிக்கூடமாக மாற்றலாம். ஆனால் பள்ளிக்கூடத்தை கார் பார்க்கிங் ஆக்குவது சரியல்ல. மேலும் பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட் போன்றவற்றை இடித் துவிட்டு நவீன விற்பனை வளாகங் கள் கட்டப் போகிறார்கள். தற்கா லிக இடங்களுக்கு வியாபாரிகள் மாற்றப்படுகின்றனர். நீண்ட நாள் மார்க்கெட்டில் வியாபாரம் செய்த வர்களுக்கே புதிய வளாகத்தில் மீண்டும் இடம் வழங்குவதை உறு திப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திறந்த நிலை டெண்டர் கோரி வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இது தொடர்பான 12 கேள்விகளுக்கு விபரங்களை எழுத்துப்பூர்வமாக தரும்படி மாநகராட்சி ஆணையர், தனி அலுவலரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். நூறு நாள் வேலை திட்டத்தில் சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு நாள் கூலி ரூ.224-ஐ முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண் டும். அதை காலதாமதம் செய்யாமல் உரிய முறையில் பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும் கே.சுப்பராயன் கேட்டுக் கொண்டார்.  அப்போது உடனிருந்த ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, தாராபுரம், காங்கேயம் பகுதிகளுக்கு நிறை வேற்றப்பட்ட காவிரி கூட்டுக் குடி நீர் திட்டம் பயனுள்ளதாகச் செயல் படவில்லை. அதை சீரமைத்து மக்க ளுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்றார். எம்எல்ஏ தனியரசு பேசுகை யில், கிராமப்புற மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா கோரிக்கையை நிறைவேற்றித் தர அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.