திருப்பூர், ஜூன் 8– திருப்பூர் அருகே பெருமாநல் லூரில் இருந்து நம்பியூர் செல்லும் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி அங்குள்ள கொண்டத்துக் காளி யம்மன் கோயில் நிர்வாகத்தார் ஆக்கிரமிப்பு முயற்சியைக் கண் டித்து பெருமாநல்லூர் பொதுமக்க ளும் அனைத்துக்கட்சி அரசியல் பிரதிநிதிகளும், திருப்பூர் நாடளு மன்ற உறுப்பினர் சுப்பராயன், எம்.எல்.ஏ விஜயகுமார் மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பா ளர் ஆகியோரிடம் ஞாயிறன்று மனு அளித்தனர். அம்மனுவில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது, பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் நிர்வாகம் கோவில் அருகே செல்லும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நம்பியூர் மற்றும் வடக்கே கிராமங்கள், அரசு மருத்துவமனைக்கு செல் லும் தார் பாதையை (க.ச எண் 277. 2 எண்ணில்) இருபுறம் வழி மறித்து அடைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கார ணமாக ஊரடங்கு உத்தரவால் பொது மக்களும் அமைதி காத்த னர்.
ஊரடங்கு தளர்வு செய்யப் பட்டதால் அத்தடையை அகற்ற கோவில் நிர்வாகத்திடம் பொது மக்கள் கூறினர். இருப்பினும் சரி யான நடவடிக்கை எதுவும் எடுக் கப்படாததால், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிர மப்படும் நிலை இருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் அத்தடையை இருசக்கர வாகனம் செல்லும் அளவிற்கு கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று அகற்றினர். ஆனால், கோவில் நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கூறி, அதை மீண்டும் அடைக்கச் செய்தனர். இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும் காவல் துறையினர் தற்போது வரை எந்த வொரு நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.
எனவே, இது தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொண்டு கோவில் நிர்வா கத்தினர் மீதும், இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் சட்டப்படியான நடவ டிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள் ளது. முன்னதாக, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வ ராஜ், மதிமுக மாவட்டச் செயலா ளர் சிவபாலன், வி.சி.க மாவட்டச் செயலாளர் தமிழ் வேந்தன், காங்கி ரஸ் மாவட்ட தலைவர் கிருஷ் ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துக்கண் ணன் மற்றும் பெருமாநல்லூர் பொதுமக்கள் ஆகியோர் நாடளு மன்ற உறுப்பினர் சுப்பராயன், எம்.எல்.ஏ விஜயகுமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆகியோரிடம் மனு அளித்த னர்.