tamilnadu

img

சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிடுக ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

 தாராபுரம், ஜுன் 17 - சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரு.9 ஆயிரம் வழங்க வேண்டும் என  ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் 3 ஆவது வட்டக்கிளை மாநாடு வட்டக்கிளை  தலைவர் பீர்ஜாபர் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் சேக்முகம்மது, பொருளாளர் மரிய செலஸ்டின்  ஆகியோர் அறிக்கையை சமர்பித்து பேசினர். ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில தலைவர்  ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து  சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக பீர் ஜாபர், செயலாளராக சேக் முகமது,  பொருளாளராக கே.ராஜேந்திரன் மற்றும் 11 பேர்  கொண்ட புதிய கமிட்டி உறுப்பினர் தேர்வு செய்யப்பட்ட னர்.  முன்னதாக, இம்மாநாட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். சத்துணவு, அங்கன் வாடி, ஊராட்சி செயலர், வருவாய் கிராம உதவியாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.