விழுப்புரம்,செப்.25- விழுப்புரத்தில் அதி கரித்து வரும் ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விழுப்புரம் மாவட்ட 4- வது மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் எஸ்.முத்துக்குமரன், வி.ஜெயராமன், எஸ்.அமுதா ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வர வேற்றார். மாநில துணைச் செயலாளர் பா.செல்வன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஏ.சங்கரன் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் எஸ். சவுரி வரவு,செலவு கணக்கை சமர்பித்தனர். தலித் முன்னுரிமை கூட்டமைப்பு தலைவர் சி.நிக்கோலஸ்,சிபிஎம் மாவட்ட செயலாளர் என். சுப்பிரமணியன், வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன், வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் சே.அறிவழகன், மாவட்டத் தலைவர் எஸ.பிரகாஷ், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஆர்.தாண்டவராயன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் வி.உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். மாநாட்டில் மாநிலத் துணைத் தலை வர் ஜி ராமசாமி நிறை வுரையாற்றினார்.
தீர்மானங்கள்
ஆணவ படுகொலையை தடுக்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும், சுயமரியாதை திருமண தம்பதிகளின் வாழ்க்கையை அரசு உறுதி படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 34பேர் கொண்ட மாவட்டக்குழுவிற்கு தலை வராக ஏ.சங்கரன், செய லாளராக ஏ.கண்ணதாசன், பொருளாளராக எஸ்.சவுரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் ஏ.கண்ணதாசன் நன்றி கூறினார்.