tamilnadu

img

அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துக

உடுமலை, ஜூலை 27-  அரசு அலுவலகங்களில் அடிப் படை வசதிகளை ஏற்படுத்த தமிழக  அரசு நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் உடுமலை வட்ட கிளையின் 13 வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக் கிளையின் 13வது மாநாடு 27ம் தேதி சனியன்று அய்யலு மீனாட்சி காம்ப்ளக்ஸில் வட்ட கிளை தலைவர் வைரமுத்து தலைமையில்  நடைபெற்றது. முன்னதாக அரசு ஊழியர் சங்க  அலுவலகத்தில் இருந்து முக்கிய  வீதிகள் வழியாக பேரணி நடை பெற்றது. பின்னர் மாவட்ட செய லாளர் அம்சராஜ் கொடியேற்றி னார். வட்ட செயலாளர் பால சுப்பிரமணியன் அறிக்கையை முன்வைத்தார். இந்த மாநாட்டில்  வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் சுகாதாரமான குடிநீர்,  கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். உடுமலை அரசு மருத் துவமனையை மாவட்ட மருத்துவ மனையாக தரம் உயர்த்தி வாகன  நிறுத்தம் அமைத்து தர வேண்டும்.  உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே அமைக்கபபட்டு வரும் சிக்னல் இல்லாத ரவுண் டானா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புற வழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். உடுமலை ரயில் நிலையத்தில் வாகன நிறுத்து மிடம், கழிப்பிட வசதி செய்து தர  வேண்டும். தென்னக ரயில்வே துறையை தனியாருக்கு  தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு  அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு

உடுமலை வட்டக்கிளை தலைவ ராக வைரமுத்து, செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாள ராக திலிப், துணைத் தலைவராக ஆனந்தராஜ், செல்வகுமார், சண்முகசுந்தரம், நாகராஜ், இணை  செயலாளராக ஈஸ்வரி, வெங்கிடு சாமி, சுரேஸ்குமார், பரமேஸ்வரன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப் பினராக ஜெகதீஸ்வரன், செல்வ ராஜ், புஷ்பவேணி ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். நிறைவாக மாவட்டச் செயலாளர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார்.  முன்னதாக, இம்மாநாட்டில்  மாவட்ட இணை செயலாளர்  தங்கவேல், ஜாக்டோ-ஜியோ  ஒருங்கிணைப்பாளர் தங்கவேல்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்துணை தலைவர் முத்துக்குமாரசாமி,  ஓய்வூதியர் சங்கத்தின் வட்ட  கிளை தலைவர் தனுஷ்கோடி,  பிஎஸ்என்எல் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் சக்திவேல்  உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.