திருப்பூர், ஜூலை 31- திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் கடை களைத் திறக்க அனுமதிக் கோரி அப்பகுதி வியாபாரி கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயனிடம் வெள்ளியன்று மனு அளித்தனர். குன்னத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு கடையின் உரிமையாள ருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இதை யடுத்து பேருந்து நிலையம் முதல் தேர்நிலை வரை உள்ள அனைத்துக் கடை களும் மூடப்பட்டன. பேருந்து நிலையத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளி லும் அனைத்துக் கடைக ளும் அடைக்கப்பட்டன.
இரண்டு வாரங்களுக்கும் மேலாக இக்கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்த னர். எனவே கொரோனா நோய்த் தொற்று பாதித்த பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள கடை களைத் திறப்பதற்கு அனு மதிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரிடம் குன்னத்தூர் வியா பாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.