tamilnadu

img

அவிநாசியில் 4 பேர்களின் வீடுகள் தனிமை

அவிநாசி, ஜூன் 15- அவிநாசி பேரூராட்சி பகுதியில் திங்க ளன்று நான்கு பேர் வீடுகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தினர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும், தமிழகத் திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிக ரிக்கும் சூழ்நிலையில், இதனைக் கட்டுப்ப டுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலை யில், தமிழக அரசாங்கம் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஜூன் 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து அவிநாசி பேரூ ராட்சி பகுதியான முத்து செட்டிபாளையம், பிரசாத் வீதி, சங்க மாங்குளம், உள்ளிட்ட பகு திகளைச் சேர்ந்தவர்கள் ஞாயிறன்று சென் னையிலிருந்து அவிநாசி வந்தனர். இதனை யறிந்த அவிநாசி பேரூராட்சி நிர்வாகம்,  சென்னையிலிருந்து வந்தவர்களை தனி மைப்படுத்தப்பட்ட இல்லமாக அறிவித்து தகவல் அட்டையை ஒட்டிச் சென்றனர். இதேபோல, அவிநாசி நியூ டவுன் பகுதிக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கள் சிலர் வந்தனர். இவர்களின் வீடுகளை யும் தனிமைப்படுத்தினர்.