tamilnadu

img

திருப்பூர் ஆட்சியகரத்தில் தனிமனித இடைவெளி கருவி பொருத்தம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகை யில், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஆதார் பதிவு மையம் மற்றும் பொது இ - சேவை மையம் ஆகிய இடங்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதைக் கண்காணிக்கவும், கூட்டம் அதி கமானால் எச்சரிக்கை செய்யவும் கணினியுடன் ஒரு கருவி பொருத்தப்பட்டுள்ளது. வியாழனன்று இந்த  கருவியை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகே யன் பார்வையிட்டு அது செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்தார்.