திருப்பூர், டிச. 14 – திருப்பூர் மாவட்டத்தில் நடை பெறும் ஊரக உள்ளாட்சி தேர்த லில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு பத விகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஊத்துக்குளி ஒன்றியத்தில் திமுக தோழமைக் கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊராட்சி ஒன்றிய 9ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட் டது. இந்த வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆர்.கருப்ப சாமி நிறுத்தப்பட்டுள்ளார். சனிக் கிழமை ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவித் தேர்தல் அலுவலரிடம் ஆர்.கருப்ப சாமி வேட்புமனுத் தாக்கல் செய் தார். அவருடன் மார்க்சிஸ்ட் கட்சி யின் ஊத்துக்குளி தாலுகா செயலா ளர் கே.ஏ.சிவசாமி, தாலுகா குழு உறுப்பினர் எஸ்.கே.கொளந்த சாமி, வி.கே.பழனிச்சாமி, விவசா யத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.மணியன் ஆகியோர் உடனி ருந்தனர். அதேபோல் ரெட்டிபாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் பத விக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கே.எஸ்.கருப்பசாமி வேட்பாளரா கப் போட்டியிடுகிறார். அவரும் சனிக்கிழமை வேட்புமனுத் தாக் கல் செய்தார். அப்போது ஊத்துக் குளி தாலுகா மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், கரைப்பாளையம் கிளைச் செயலாளர் கே.எஸ்.ராம சாமி உள்பட கட்சி அணியினர் பங்கேற்றனர். தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் 12 வது வார்டு உறுப்பினர் பத விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்.நாச்சி முத்து (60) வியாழனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சசிக்குமார் பெற்றுக் கொண்டார். அதேபோல் கவுண்டச் சிபுதூர் ஊராட்சி 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு என்.செங் குட்டுவன் (65) போட்டியிடு கிறார். இதற்கான வேட்பு மனுவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஈஸ்வரமுர்த்தியிடம் தாக்கல் செய் தார். செங்குட்டுவன் அரசு போக் குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கான வைப்பு தொகை ஓய்வு பெற்ற அரசுபோக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட் டது. சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், இடைக்கமிட்டி உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மனு அளிக்கும் போது உடனிருந் தனர்.