tamilnadu

img

சூறை காற்றுடன் கன மழை: வாழை மரங்கள், வீடுகள் சேதம்

அவிநாசி, மே 7அவிநாசி அடுத்த சுண்டைக்காய்பாளையத்தில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால் வாழை மரங்கள், வீடுகள் சேதமடைந்தன.அவிநாசி ஒன்றியம் நம்பியாபாளைம் ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்காய் பாளையத்தில் கிருஷ்ணசாமி தோட்டத்தில் 1,500 நேந்திரம் வாழை மரங்கள் பயிரிடப்பட்டன. ஜூன் மாதத்தில் வாழைகள் விற்பனைக்காக இருந்த நிலையில், திங்களன்று சூறை காற்றுடன் கன மழை பெய்தது. இதனால், 1500 வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதேபோல் கருவலூர் ஊராட்சிக்குட்பட்ட கனரா வங்கி வீதியில் நீண்ட நாட்களாக சாக்கடையில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் சாக்கடை நீருடன் மழைநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் செவ்வாயன்று சாக்கடையை சீரமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். இதேபோல், சேவூரில் ரெயின்போ குடியிருப்பு பகுதியில் உள்ள சந்திரகலா என்பவர் வீட்டின் மேல் மரம் விழுந்ததால் சுற்றுச்சுவர் சேதமடைந்தன. மேலும், இந்திராணி என்பவர் வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.