districts

img

நூறாண்டு பழமையான ஆலமரம் விழுந்து வீடுகள் சேதம் எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆய்வு

புதுக்கோட்டை, டிச.13- நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமையான ஆல மரம் சாய்ந்து நான்கு வீடு கள் சேதமடைந்தன.  புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை அருகே உள்ளது கோமாபுரம் கிரா மம். இங்கு நூறு ஆண்டு களுக்கும் மேலான பழமை யான ஆலமரம் இருந்தது.  அந்த மரம் செவ்வாய்க் கிழமை காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக  முறிந்து கீழே விழுந்தது. இத னால் மரத்தின் அருகில் உள்ள நான்கு வீடுகள் சேத மடைந்தன. மணியம்மை என்ற 70 வயது மூதாட்டி காய மடைந்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரு கிறார். தகவல் அறிந்ததும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர்,  காவல் ஆய்வாளர் செந்தில்  மாறன் உள்ளிட்ட அதிகாரி களுடன் நேரில் சென்று பார்  வையிட்டதோடு பாதிக்கப் பட்ட குடும்பத்தினரை சந் தித்து ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு புதிய கான்கிரீட் வீடுகள் கட்  டித் தரவும் எம்.சின்னதுரை எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினருடன் ஒன்றியக் குழு துணைத் தலைவர் செந்தாமரை, திமுக ஒன்றி யச் செயலாளர் தமிழ் அய்யா,  ஊராட்சி மன்றத் தலை வர்கள் டி.அன்பு, சிவரஞ்சனி சசிக்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.