புதுக்கோட்டை, டிச.18 - புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை அருகே புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை ஆய்வு செய்தார். கந்தர்வகோட்டை சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி அம்புக்கோவில் ஆண்டாள் தெருவுக்கு சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக பேராடி வருகின்றனர். இந்நி லையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தான் வெற்றி பெற்றால் மேற்படி கோரிக்கையை நிறை வேற்றுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளராகப் போட்டியிட்ட எம்.சின்னதுரை வாக்குறுதி அளித்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை முயற்சியால் மேற்படி கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தப் பட்டது. இதனைத் தொ டர்ந்து மேற்படி சாலையை மேம்படுத்தப்பட்ட தார்ச்சா லையாக தரம் உயர்த்தும் நடவடிக்கையையும் சட்ட மன்ற உறுப்பினர் மேற் கொண்டார். இதனையடுத்து, புதுக் கோட்டை கோட்டாட்சியர் சா.முருகேசன் மற்றும் கந்தர்வகோட்டை, கறம் பக்குடி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மேற்படி சாலையை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆய்வு மேற்கொண்டார். விரைவில் தார்ச்சாலையாக தரம் உயரத்த நடவடிக்கை எடுக்கப் படும் என அப்பகுதி மக்களி டம் உறுதியளித்தார். இதற் காக ஆண்டாள்தெரு கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பின ருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.