திருப்பூர், ஆக. 6- திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகம், வெளி ஆசிரியர்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு முறைகே டாக பணி நியமனம் செய்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந் தால், அதே பள்ளியில் பணியாற் றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை முன்னுரிமை அடிப்படையில் கல் வித் துறை மூலம் நியமிக்க வேண் டும் என விதிமுறை உள்ளது. ஆனால், அந்த விதிமுறையை மீறி, பள்ளி நிர்வாகங்கள் முறை கேடாக வெளியில் இருந்து ஆசிரி யர்களை நியமிக்கும் செயல் நடை பெறுகிறது. கல்வித்துறை அதிகாரி களின் உடந்தையுடன் இதுபோல் செய்யப்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், உடுமலை பகுதி யில் சுமார் 2ஆயிரம் மாணவர்கள் படிக்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளியில் இந்த முறைகேடு நடை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் கொரோனா ஊர டங்கு அமலில் இருக்கும் பொது முடக்கச் சூழலில் பள்ளி நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பள்ளியில் முதுகலை பட்டப்படிப்புப் படித்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான தகுதி யுடன் ஏற்கெனவே ஐந்துக்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்ற னர்.
மேல்நிலை வகுப்புகளுக்குரிய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் காலியான நிலையில், அதே பள்ளியில் வேலை செய்யும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் களை முன்னுரிமை அடிப்படையில் நியமித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நியமிக்கா மல், அந்த ஆசிரியர்களை மிரட்டி அவர்களிடம் ஆட்சேபணை இல்லை என்று என்ஓசி சான்றித ழைக் கேட்டுப் பெற்றுள்ளனர். அரசு உதவி பெற்றாலும், தனியார் நிர்வா கமாக இருப்பதால் அந்த ஆசிரியர்க ளும் அச்சப்பட்டு என்ஓசி சான்றித ழில் கையெழுத்திட்டுக் கொடுத்துள் ளனர். இதனால் அதே பள்ளியில் வேலை செய்யும் முதுகலை ஆசிரி யர்கள் ஆட்சேபிக்கவில்லை என பொய்யாகக் கூறி, வெளியில் இருந்து முதுகலைப் பட்டப்படிப்புப் படித்தவர்களை மேல்நிலை வகுப்பு களுக்கான ஆசிரியர்களாக நிய மித்துள்ளனர். மொத்தம் மூன்று பேர் இந்த பணியிடத்தில் நிரப்பப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவரிடமும் தலா ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு மேற்படி பள்ளி நிர்வாகம் பணி நியமனம் செய்திருப்பதாக ஆசிரியர்கள் தரப் பில் குற்றம் சாட்டப்படுகிறது. கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குத் தெரியாமல் இவ் வாறு பணி நியமனம் செய்ய முடி யாது. எனவே கல்வித்துறை உயரதி காரிகளும் அந்த பள்ளி நிர்வாகத் தின் முறைகேடான நடவடிக்கைக்கு உடந்தையாக செயல்பட்டிருக்கின் றனர் என்றும் பாதிக்கப்பட்ட ஆசிரி யர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படு கிறது. கடந்த மார்ச் 24ஆம் தேதி கொரோனா பொது முடக்கம் அறி விக்கப்பட்ட பிறகு இது போன்ற ஆசிரியர் பணி நியமனம் எதுவும் நடைபெறவில்லை. பொது முடக் கம் முடிந்த பிறகே ஆசிரியர்கள் நிய மனம் தொடர்பான நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் மேற்காணும் பள்ளியில், மே மாதத்தில் மூன்று ஆசிரியர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். இதுவும் கல்வித்து றைக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது. எனவே அரசின் உதவி யைப் பெற்றுக் கொண்டு தவறி ழைக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு கல் வித் துறையைச் சேர்ந்த உயரதிகா ரிகளும் துணை போயிருக்கின்றனர் என ஆசிரியர் அமைப்புகள் கூறு கின்றன. இது தொடர்பாக மாநில கல்வித் துறை இந்த பள்ளி மட்டு மல்லாது, இதுபோல் முறைகேடாக செயல்பட்டுள்ள அனைத்துப் பள்ளி களிலும் விரிவான ஆய்வு மேற் கொண்டு, ஆசிரியர்களிடமும் விசா ரணை நடத்தி, தவறிழைத்த நிர்வா கங்கள் மீது நடவடிக்கை எடுப்பது டன், தகுதி வாய்ந்த ஆசிரியர்க ளுக்கு உரிய பணி உயர்வு கிடைப் பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பாதிக்கப்பட்ட முது கலைப் பட்டதாரி ஆசிரியர்கள் வலி யுறுத்துகின்றனர். (ந.நி)