தாராபுரம், ஜூன் 12 – தாராபுரத்தில் நடை பெற்ற மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத் தில், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித் தனர். இதை சீரமைக்கப் படும் என கண்காணிப்பு பொறியாளர் உறுதியளித் தார். தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மான கழகம், பல்லடம் மின் பகிர்மான வட்டம் மற்றும் தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தமிழ்சேகரன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் தாராபுரத்தில் மின் தடை காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப் பட்டது. மேலும் பொதுமக்கள் தரப்பில், தாராபுரம் பகுதியில் அடிக்கடி அறிவிக்கப் படாத மின்தடை ஏற்படுவதால் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பாதிக் கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேற்பார்வை பொறி யாளர் தமிழ்சேகரன் பதிலளிக்கையில், மழை மற்றும் காற்றின் காரணமாக மின் தடை ஏற்படுகிறது. இதுகுறித்து துணை மின் நிலையத்தில் தொடர்பு கொண்டு அப் பகுதிகளில் மின்தடையை களப்பணி யாளர்கள் உடனடியாக சரிசெய்து வரு கின்றனர். மேலும் அரசு மருத்துவமனை மற்றும் நீதிமன்றங்களுக்கு முன்னுரிமை அளித்து மின்தடை ஏற்படாதவாறு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும். பொதுமக்கள் மின்தடை குறித்து மின்வாரிய அலுவ லகத்தில் தகவல் அளித்தால் களப்பணி யாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உடனடியாக சரி செய்து தர அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இதையடுத்து செயற்பொறியாளர் மகேஸ்வரன், உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.