அவிநாசி, அக்.2- மின் இணைப்பு வழங்கு வதற்கு மின்வாரியத்தினர் லஞ்சம் கேட்பதாக புத னன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் புகார் தெரிவித் தனர். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, பெருமநல்லூர் ஊராட்சி பொடாரம்பாளை யத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு பற்றாளர் யசோதா தலைமை வகித் தார். ஊராட்சி செயலாளர் மகேஷ் முன் ்னிலை வகித்தார். இதில் இளைஞர் பெருமன்ற முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் மகேந்திரன், சேகர், வைத்தீஸ்வரன், கமலா, ராஜா உள்பட 20வதுக்கும் மேற்பட்டோர் வாயில் கருப்புத் துணி கட்டி, கிராம சபைக் கூட்டத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து அவர்கள் கூறிய தாவது, கொண்டாத்தம்மன் கோயில் நகர், கற்பகாம்பாள் நகர் முதல் வீதி, அண்ணாமலை கார்டன் தெருக் குழாய், மழைநீர் வடிகால், தார்ச் ்சாலை ஆகியவை அமைப்பதற்கு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.அதே போல் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியத்தினர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்கின்றனர். மேலும் வீடுகளில் மின்இணைப்பில் பழுதடைந்தால், சீரமைக்க மின் வாரியத்தினர் வருவதில்லை.எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதற்கு ஊராட்சி நிர் வாகத்தினர், தெருக் குழாய்கள் உடனடியாக அமைக்கப்படும். மேலும் விரைவில் நிதி பெற்று தார்ச்சாலை, மழைநீர் வடிகால் அமைக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதேபோல் பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட அவி நாசிலிங்கம்பாளையம் பிரிவு முதல், தேவம் பாளையம் வரை உள்ள பழுதடைந்ததார்ச்சாலை செப்பனிட தீர்மானம் நிறை வேற்றப்பட்டன. ஆனால் இது வரை தார்ச்சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவில்லை. இதை கண்டித்து கிராமசபை கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி கலந்து கொண்டனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர், ரூ.34 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.