திருப்பூர், ஜூலை 21- திருப்பூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க மும், ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. திருப்பூர் பி.கே.ஆர்.காலனி கோட்டை மாரியம்மன் கோவில் அன்னதான மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமில் ஓய்வுபெற்ற காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. சங்கத் தலைவர் வி.பி.பாலகிருஷ்ணன் தலைமை ஏற்க, கௌரவத் தலைவர் பஷீர் அகமது வரவேற்றார். மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் இம்முகாமைத் தொடக்கி வைத்து வாழ்த்திப் பேசினார். ஐ பவுண்டேஷன் மருத்துவர் ஜெ.ரவி, மாநகர காவல் துணை ஆணையர் இ.எஸ்.உமா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற காவலர் மற்றும் குடும் பத்தார் திரளானோர் பங்கேற்றனர்.