tamilnadu

சேவூரில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை

அவிநாசி, மார்ச் 7- சேவூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அவிநாசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி பாலமுருகன் ஆகிய குழுவினர் சேவூரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சேவூர் மெயின்ரோடு, புளியம்பட்டி ரோடு  மற்றும் குன்னத்தூர் ரோடு ஆகிய பகுதிகளில்  உள்ள  பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை கடை உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 கிலோ எடையுள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனைப் பறிமுதல் செய்து அபராதமாக ரூ.15ஆயிரம் விதிக்கப்பட்டது.  இது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், உணவு பொருட்களின் தரம், கலப்படம், பான்மசாலா, குட்கா, புகையிலை ஆகியவை குறித்து  பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க  9444042322 என்கிற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.