tamilnadu

img

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் 5 குடோன்களுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறையினர்

கோபி, மார்ச் 10- கோபிசெட்டிபாளையத்தில் உணவுபாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்தி ருந்த புகையிலைப் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.  ஈரோடு மாவட்டம், கோபிசெட் டிபாளையம் நகராட்சி பகுதியில்  தடைசெய்யப்பட்ட புகையிலைப்  பொருட்கள் மற்றும் நெகிழிப்பொ ருட்கள் விற்பனை செய்யப்படுவ தாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், உணவுபாது காப்புத்துறை அதிகாரி குழந்தை வேலு தலைமையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள குடோன்களில் செவ்வாயன்று அதிரடி சோத னையை மேற்கொண்டனர். இச் சோதனையில் தமிழக அரசால்  தடைசெய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட் களையும், 8 டன்னிற்கு அதிகமான நெகிழிப்பொருட்களையும் பறிமு தல் செய்தனர். இதனைதொ டர்ந்து, ரூ. 25 ஆயிரம் முதல் 1  லட்சம் வரை அபராதம் விதித்த உணவுபாதுகாப்புதுறையினர், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 குடோன்களுக்கும் சீல் வைத்த னர். மேலும், அக்குடோன் உரிமை யாளர் மீது அதிகாரிகள் தொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த  திடீர் சோதனையால் கோபிசெட்டி பாளையம் வணிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.