tamilnadu

img

தருமபுரி மார்க்கெட்டில் தரமற்ற மீன்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை

தருமபுரி, மார்ச் 3- தருமபுரி மாவட்டம், சந்தைப் பேட்டை மற்றும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட தரமற்ற மீன்களை உணவு பாதுகாப்புத்து றையினர் மீன்களை பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள மீன் சந்தை , மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் விற்கப் படும் மீன்கள் மற்றும் மீன் பொருள் கள் தரம் கண்டறியவும், மீன்கள் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க பார்மலின் எனும் ரசாயனம் கலக் கப்ட்டிருக்கிறதா  என ஆய்வு செய் யவும், ராசாயனம் கலப்பது  கண்டறியப்பட்டால் உரிய நட வடிக்கை மேற்கொள்ளவும் தமிழக மீன்வளத்துறை உத்தரவிட்டுள் ளது. இதன் பேரில், தருமபுரி மாவட்டத்தில்  மாவட்ட ஆட்சியர்  எஸ். மலர்விழி  உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை யும், மாவட்ட மீன் வளத்துறையும் இணைந்து  தருமபுரியில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட் மற்றும் சந்தை பேட்டை பகுதியில் உள்ள மீன் விற்பனை மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில்  உணவு பாது காப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசு ஜாதா,  தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலு வலர் கே.நந்தகோபால் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் சி.சுப்பிரமணி ஆகியோ ருடன் மீன் வளத்துறை ஆய்வா ளர் எச்.அசினாபானு உள்ளிட்ட குழுவினர்  ஆய்வு செய்தனர். அப் போது கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மீன்கள் மற்றும் குளி ரூட்டப்பட்ட பெட்டிகளில் இருந்த மீன்கள் உள்ளிட்டவைகளை பார் வையிட்டு தரம்  மற்றும் பார்மலின் கலக்கப்பட்டுள்ளதா என பரி சோதனை செய்யப்பட்டது. இதில், வெவ்வேறு ரக மீன்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்மலின் எனும் ரசாயனம் தெளிக்கப்பட்டிருக்கவில்லை என  கண்டறியப்பட்டது. ஆனால், ஒரு சில கடைகளிலிருந்து மட்டும் தரம் குறைவான, தகுதியற்ற சுமார் 15 கிலோ அளவில், ரூ.1,200 மதிப்பி லான மீன்கள் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும், நகராட்சி மீன் மார்க் கெட் பகுதிகளில் உள்ள கடைக ளில் தரை தளங்கள், குளிரூட்டப் பட்ட கலன்கள் சுகாதாரமற்ற வகையில் காணப்பட்டதை எச்ச ரித்தும், முறையாக பராமரிக்கவும், மீன்கள் அதிக நேரம் வெளியில் வைக்காமல் உரிய முறையில் பரா மரித்து விற்பனை செய்ய மாவட்ட நியமன அலுவலர் உத்தரவிட் டார்.