அவிநாசி, ஜூன் 30 - அவிநாசி அருகே நம்பி யாம்பாளையம் பகுதியில் திங்களன்று முகக் கவசம் அணியாதவர்கள் மீது பறக் கும் படையினர் அபராதம் விதித்தனர். கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் உள்ளிட்ட அறி வுரைகளை வழங்கி வருகி றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதி யில் முகக் கவசம் அணிந்து செல்லாதவர்கள் மீது பறக் கும் படையினர் அபராதம் விதித்தனர்.