tamilnadu

img

அவிநாசி பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்

அவிநாசி, நவ. 3- அவிநாசி பகுதிகளில் ஒரு மாத மாக குடிநீர்  விநியோகம் நிறுத்தப் பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்துள்ளனர். அவிநாசி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு இரண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது. இதில் முதல் குடிநீர் திட்டத்தின் வழியாக கருவ லூர், நம்பியா பாளையம், ராமநாத புரம் மற்றும் அவிநாசி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங் கப்படுகிறது. இதில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் தடை பட்டது. ஒரு மாத காலம் கடந்த நிலை யிலும் குழாய் உடைப்பு சரி செய் யப்படவில்லை.  இந்த நிலையில் கருவலூர், நம்பி யாபாளையம், ராமநாதபுரம், போன்ற பகுதிகளில் மக்கள் குடி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, குடிநீர் குழாய் இணைப்பு பணி நடைபெற்று வரு கிறது. இப்பணி முடிவடைய மேலும் ஒருவார காலம் ஆகும் என தெரிவித் தார். இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் என்பது மக்க ளின் அத்தியாவசியத் தேவை. ஒரு மாதம் கடந்த நிலையிலும் குடிநீரை முறையாக விநியோகிக்க முடிய வில்லை. எத்தனையோ நவீன உபகர ணங்கள் வந்த நிலையிலும் கூட, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய முடியவில்லை. இது அரசின் அலட்சியமாகவே பார்க்க முடிகி றது. இதனைத் தவிர்த்து, போர்க் கால அடிப்படையில் பொதுமக்க ளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.