தஞ்சாவூர், ஆக.29 - தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதி களில் உள்ள தெரு மின்விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர் என மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் அளித்தனர். தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன் றக் கூட்டம் திங்கள்கிழமை மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்துக்கு துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சரவ ணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாமன்ற உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் கள், மாநகராட்சியில் ஒப்பந்த பணியா ளர்களுக்கு இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர் மார்க்கெட் பணிகள் முடிந்து கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ள தால், மாநகராட்சிக்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அந்த மார்க்கெட்டை திறக்க வேண்டும். மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் தெரு மின் விளக்குகள் ஒரு மாதமாக ஒளிரவில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்க ளில் பாதிக்கப்படுகின்றனர். தஞ்சாவூர் பூச்சந்தையினால் ஏராள மானோர் வாழ்வாதாரத்தை பெருக்கி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனவே பூச்சந்தையை இடமாற்றம் செய்யப் போவதாக கூறுவதை கை விட வேண்டும். மகர்நோன்புச்சாவடி பகுதியில் புதை சாக்கடையில் அவ்வப் போது அடைப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் குறை களை மேயர் முன்னிலையில் தெரி வித்து தீர்வு காண வாரந்தோறும் மாநக ராட்சி பகுதியில் குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
உறுப்பினர்களின் கேள்விக்கு பதில ளித்து மேயர் சண்.ராமநாதன், ஆணை யர் க.சரவணக்குமார் ஆகியோர் பேசு கையில், காமராஜர் மார்க்கெட், சிவ கங்கை பூங்கா, சரபோஜி கல்லூரி மைதானம் சுற்றுச்சுவர் பணிகள் முடி வடைந்துள்ளன. இதனை விரைவில் தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைப்பார். கடந்த காலங்களில் நியமிக்கப் பட்ட ஒப்பந்தக்காரர்தான் தெருமின் விளக்குகளை பராமரித்து வந்தார். அவரது பணிகள் திருப்திகரமாக இல்லை. எனவே அவரது ஒப்பந் தத்தை விரைவில் ரத்து செய்து, வேறு நபரிடம் வழங்கப்படும். விரைவில் அனைத்து தெரு மின் விளக்குகளும் ஒளிர நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த பணியாளர்களுக்கான ஊதி யத்தை வழங்க ஒப்பந்தக்காரரிடம் உடனடியாக வலியுறுத்தப்படும். தஞ்சா வூர் பூச்சந்தை பகுதியில் உள்ளவர் களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இடமாற்றம் செய்யவில்லை. சாலையோர ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்படும். தஞ்சாவூர் திருவள்ளுவர் வணிக வளாகத்தில் முதல் தளத்தில் 43 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒரே இடத்தில் ஏராளமான நகைக் கடைகளுக்கு ஏலம் விடப்படவுள்ளது. காந்திஜி வணிக வளாகத்தில் வங்கி, துணிக்கடை உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட வுள்ளன என்றனர்.