உடுமலை, செப். 21- உடுமலையில் உள்ள தொழி லாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவ மனையில்(இஎஸ்ஐ) உள்ள மருத் துவர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற தொழிலாளர்கள் நிண்ட நேரம் காத்திருக்கும் நிலை எற்படுகிறது. உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் உடு மலை ஊராட்சி ஒன்றிய அலு வலகம் பகுதியில் இஎஸ்ஐ மருத் துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள், மூன்று மருந்தாளு நர்கள் மற்றும் ஆய்வுக்கூட வசதி யுடன் இயங்கி வந்தது. மேலும், ஆம்புலன்ஸ் மூலம் நடமாடும் மருத்துவமனையாக காலையில் பூலங்கிணறு மில்கேட் பகுதியி லும், மாலையில் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியிலும் தொழி லாளர்களுக்கு மருத்துவம் பார்க் கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது இந்த மருத் துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுநர் மட்டுமே உள் ளனர். மேலும் ஆய்வுக் கூட வேலைக்கு ஆள் இல்லாமல் பணியிடம் காலியாக உள்ளதால் ஆய்வுக்கூடம் செயல்படாமல் உள்ளது. மேலும் இந்த மருத்து வமனை வளாகம் முற்றிலும் புல், புதர்கள் நிறைய வளர்ந்து உள்ளதால் விச பூச்சிகள் தங்கு மிடமாகக் காட்சி தருகிறது. இந்த மருத்துவமனைக்குத் தினமும் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும் பத்துடன் மருத்துவம் பார்க்க வருகிறார்கள். ஆனால் மருத்து வர் பற்றாக்குறையால் மறுநாள் மீண்டும் சிகிச்சைக்கு வர வேண் டிய நிலை ஏற்படுகிறது.மேலும் ரத்தம் பரிசோதனை எடுக்க வேண்டும் என்றால் வெளியே தனியார் நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள் ளது. சில நாட்கள் தங்கி மருத்து வம் பார்க்க வேண்டும் என்றால் கோவை சிங்காநல்லூர் மருத்து வமனைக்குச் சென்று சிகிச்சை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து சிஐடியு மாவட் டத்துணை செயலாளர் எஸ்.ஜெகதீசன் கூறியதாவது, தொழி லாளர்களின் நலன் கருதி ஆரம் பிக்கபட்ட இஎஸ்ஐ மருத்துவ மனையில் தற்போது மருத்து வர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை யால் இங்கு சிகிச்சைக்கு வருப வர்கள் மிகவும் சிரமப்படுகி றார்கள். ஆகவே, காலிப்பணி யிடங்களை நிரப்புவதுடன், இந்த மருத்துவமனை கட்டிடத்தில் மடத்துகுளம், குடிமங்கலம், உடு மலை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பயன்படும் வகையில் படுக்கை அறைகளுடன் கூடிய மருத்துமனையாக மாற்ற வேண்டும். மருத்துமனை வளா கத்தை சுத்தப்படுத்தி, பழுத டைந்த கட்டிடங்களை சீர் செய்ய வேண்டும் என்றார். பல்வேறு போராட்டங்க ளுக்குப் பிறகு தொழிலாளர் நல னுக்கு என்று ஆரம்பிக்கப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
கே.மகாதேவன்