tamilnadu

img

அவிநாசி பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பு

அவிநாசி, ஏப்.1 - அவிநாசி ஒன்றிய பகுதிகளில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா திங்களன்று நரியபள்ளிபுதூரில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார். நரியபள்ளிபுத்தூரில் துவங்கி இப்பிரச்சார பயணம் கருவலூர், ஆட்டையாம்பாளையம், வேலயுதம்பாளையம், தெக்கலூர், அவிநாசி ஒன்றியம், சேவூர் ஒன்றியம், பூண்டி பேருராட்சிக்குட்பட 40க்கு மேற்பட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஆ.ராசா பேசுகையில், மத்தியில் மதவாத ஆட்சியும், மாநிலத்தில் ஊழல் ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஆட்சியை அகற்றிட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகிறேன். ஆகவே, எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.முன்னதாக, இந்த பிரச்சார இயக்கத்தில் திமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ், சுவாமிநாதன் பழனிச்சாமி, அவிநாசியப்பன், தங்கவேல், வரதராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் இசாக், ஒன்றிய பொருளாளர் விஜயராகவன், காங்கிரஸ் கட்சியின் வெங்கடாசலம், மணி, மதிமுக சுப்பிரமணியம், பெருமாள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் லோகநாதன், கணேஷ், விசிக தமிழ்வேந்தன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.